‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’
என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து 23 ஆண்டாகிவிட்டது. அவரின் நினைவுகளை ஒரு கணம் மீட்டுப் பார்ப்போம்.

05.01.2000 அன்று கொழும்புநகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத்துப்பாக்கியை இயக்கி, ஐந்து குண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்பலத்தில் உயிரைக் குடித்தான்.
சிங்களப்பேரினவாதிகளின் தமிழர் விரோதக் கருத்துகளுக்கு சுடச்சுட, ஆணித்தரமான பதில்களை வழங்கி, எதிர்வாதம் புரிந்த தமிழீழ தேசப் பற்றாளர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்தவுடன் அவரது இழப்பிற்கு அவர்கள் இரங்கல் தெரிவித்தும், அவரின் போராட்டப் பங்களிப்பை நினைவுகூர்ந்தும் தமிழர் தொடர்பு ஊடகங்கள் அஞ்சலி செலுத்தி, அவரைக் கெளரவப்படுத்தின. தமிழீழத்திலும், புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அவருக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. படையினரின் தொல்லைகளையும் அசட்டை செய்துவிட்டு ஆயிரக்கணக்கில் கொழும்பு நகரில் திரண்ட தமிழர்கள் அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலியைத் தெரிவித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக குமார் பொன்னம்பலத்தின் துணிச்சலான போராட்டப் பங்களிப்பை புகழ்ந்து பேசிய தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் “மாமனிதர்” என்ற அதியுயர் விருதை அவருக்கு வழங்கி, அன்னாரின் தேசிய சேவையை கெளரவித்து, அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Share this content:
Post Comment