இலங்கை காவல்துறையினர் மொழி உரிமைகளை மீறி நடக்கின்றனர் – வேலன் சுவாமிகள் .
“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” போராட்ட வழக்கு நாளை (14) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
குறித்த வழக்கானது நாடாளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால் கடந்த வருடம் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொலிஸார் சிங்கள மொழியில் இவ்வழக்கு அறிவித்தலை தனக்கு வழங்கியுள்ளமை மூலம் மொழியுரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
Share this content:
Post Comment