இளங்கானக் குயில் 2025 – தாணிகா திலீபன்
இளங்கானக் குயில் 2025 விருதை தனதாக்கிக் கொண்டாள் தாணிகா திலீபன்.
இது ஒரு விருது என்பதை தாண்டி தாணிகா திலீபன் என்ற பெயருக்கு கிடைத்த அடையாளமாகவும் அறிமுகமாகவும் நான் கருதுகின்றேன்.

இவளின் இசை ஆசிரியை இசைக்கலை மணி திருமதி வைஷ்ணவி கவிக்காந் இவரை நான் 2008 ஆம் ஆண்டு கானக் குயில் நிகழ்வில் வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா என்ற பாடலை பாடும்போது அவருக்கு பன்னிரென்டு வயது இருக்கும் என்று அப்பாடலை பாடும்போது அரங்கமே அதிர்ந்து போனது .
இப்பாடலை யார் பாடினாலும் முதலில் நினைவுக்கு வருவது வைஷ்ணவியின் பெயர் தான்.
இன்று இவர் ஜெயகௌரீஸ்வராலயம் எனும் இசைப்பள்ளியை தொடங்கி இசையை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார்.
இவரின் முதல் மாணவி தாணிகா திலீபன் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
ஜெயகௌரீஸ்வராலய இசைப்பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .
Share this content:
Post Comment