ஐ.நா.முன்றிலில் ஓரணியாகத் குரல் கொடுப்போம்…
இப்படத்தில் உள்ள இருவரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரி தம் உயிரை ஈகம் செய்தவர்கள்.
ஒருவர் யூத இனத்தவர். பெயர் – ஸ்டீபன் லக்ஸ்
இன்னொருவர் ஈழத் தமிழரான ஈகைப் பேரொளி முருகதாசன்
யூத இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி ஸ்டீபன் லக்ஸ் 03.07.1936அன்று ஐ.நா. மன்றத்தில் தற்கொலை செய்தார்.
தமிழின படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி முருகதாசன் 12.02.2009 அன்று ஐ.நா. முன்றலில் தன்னை தீயில் ஆகுதியாக்கி தன் உயிரை ஈகம் செய்தார்.
யூதர்களுக்கு இஸ்ரவேல் என்ற நாடு கிடைத்துவிட்டது.
ஆனால், தமிழர்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.
எமக்காக இறந்தவர்களின் தியாகங்கள் வீண் போகக்கூடாது…
Share this content:
Post Comment