குருநகர் இராணுவ முகாம் தகர்ப்பு – 24.02.1984
சிங்கள அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள்.!
பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வதை முகாமாக விளங்கியதும் இனவாத சிறீலங்கா இராணுவத்தின் பிராந்தியக் காரியாலயமாக விளங்கியதுமான குருநகர் இராணுவ முகாம் கட்டிடங்கள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளால் 24.02.1984 அன்று வெடிவைத்துத் ” தகர்க்கப்பட்டன.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலால் முழு கட்டிடமும் தகர்ந்து விழுந்து தரைமட்டமாக்கியது. கற்குவியலைத் தவிர ஒரு இராணுவ முகாம் இங்கு இருந்ததற்கான தடயங்கள் கூட இல்லாத அளவுக்கு இம்முகாம் நாசமாக்கப்பட்டது.
குரு நகரில் அமைந்திருந்த இந்த இராணுவ முகாம் வடக்கே குடிகொண்டிருந்த சிங்கள இராணுவத்தின் முன்னாள் நிர்வாக தலைமையகமாக இயங்கி வந்தது. சிங்கள வெறியறின் சித்திரவதைக்கு பெயர்போன இடமாகவும் இது விளங்கியது.
நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப் போராளிகள் இந்த இராணுவ முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு மிருகத்தனமாக சித்திரவதைக்கு ஆளாகினர்.
1983 ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவ படையினரைச் சுட்டுக் கொன்றதையடுத்து சிங்கள இராணுவத்தினர் இந்த இராணுவ முகாமை விட்டு தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர்.
இந்த முகாமை விஸ்தரித்து புதிய அரண்களை நிறுவி பாதுகாப்புகள் நிறைந்த ஒரு கோட்டையாக மாற்றியமைப்பதற்கு சிங்கள இராணுவ தலைமைப்பீடம் புதிய திட்டம் ஒன்றை தீட்டியது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த முகாமை குண்டு வைத்து தகர்த்தமை சிங்கள அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. யாழ் நகரின் மத்தியில் பலத்த கண்காணிப்பு போடப்பட்டிருந்தும் இச்சம்பவம் நிகழ்ந்தமை அரசுக்கு திகிலுடன் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
Share this content:
Post Comment