Loading Now
×

தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் சிங்கள பேரினவாத அரசால் கடத்தல்.29.01.2006

புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் கடத்தல்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் சிங்கள பேரினவாத அரசால் கடத்தல்.29.01.2006

2006 ஜனவரி 29 ஆம்,30ஆம் நாட்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொலநறுவ மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டனர்.

அவ்வேளையில் அவர்கள் மட்டக்களப்பு அலுவலகத்திலிருந்து கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு சில நாட்களின் பின்னர் இரு பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்னொரு பெண்ணான எஸ் டோசினி என்பவரும் கடத்தல் காரர்களால் விடுதலை செய்யப்பட்டார்.
ஏனைய ஏழு பணியாளர்களும் இற்றைவரை காணாமலே போயுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்யுமாறு 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் சர்வதேச மன்னிப்புச் சபை ஓர் அவசர வேண்டுகோளை விடுவித்திருந்தது.

இந்தப் படுகொலையானது இந்தியாவினுடைய நீதிபதி ஒருவர் தலைமை தாங்கிய சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டுமென சிறிலங்கா அரசாங்கத்தால் செய்யப்பட்ட பல படுகொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நிபுணத்துவக் குழுவானது 2008 ஆம் ஆண்டு இந்த படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளில் அதிருப்தி அடைந்தவர்களாக இக்குழுவை விட்டு முற்றாகவே வெளியேறியுள்ளனர்.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை