Loading Now
×

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவு அறிவிப்பு…

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவு அறிவிப்பு…

10.03.2025
ஊடகங்கள்/ ஊடகவியலாளர்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!

மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினராகிய நாம், இவ்வாண்டு எமது தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களின் பேராதரவுடன் பேரெழுச்சியாக நடாத்துவதற்கு உறுதி பூண்டுள்ளோம்.

அந்த வகையில், தமிழீழ மாவீரர் பணிமனை 10.03.2025 ஆம் நாளாகிய இன்று வெளியிடுகின்ற தலைவரின் வீரச்சாவு அறிவிப்பினை எமது மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கும் பெரும் பணிக்கு, ஊடகத்துறையினரின் பேராதரவை வேண்டி நிற்கின்றோம்.

மாவீரர் பணிமனையின் அறிவிப்பானது காணொளியாகவும் தமிழீழ மாவீரர் பணிமனை இணைப்பாளர் திரு. இ. பிரசாத் அவர்களின் ஒப்பத்துடனான அறிக்கையாகவும் வெளியாகியுள்ளது.

மேற்படி காணொளி மற்றும் அறிக்கையினை மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப் பிரிவினராகிய நாம், நேற்றைய நாள் (09.03.2025) செய்திருந்த அறிவிப்பின் அடிப்படையில் தங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

சி. அறிவுமணி
இணைப்பாளர்,
ஊடகப்பிரிவு,
மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை