Loading Now
×

நெடுமாறன் ஐயாவுக்கு ஒரு அப்பாவித் தமிழனின் கடிதம்.

நெடுமாறன் ஐயாவுக்கு ஒரு அப்பாவித் தமிழனின் கடிதம்.

மதிப்புக்குரிய நெடுமாறன் ஐயாவுக்கு…
ஒரு அப்பாவித் தமிழன் எழுதும் கடிதம்.

ஐயா!
இந்த வயதான காலத்தில் நீங்க எதுக்கு அறிக்கையெல்லாம் விட்டு சிரமப்படுறீங்க.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். உங்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் அடிக்கடி கூறி வருகிறீர்கள்.
அப்படியென்றால் பிரபாகரனிடம் கூறி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டலாமே?

பிரபாகரன் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள்தானே.
அடுத்து, உங்கள் அருகில் இருக்கும் காசி ஆனந்தன் அவர்களிடம் இந்துத் தமிழீழம் கேட்பது பெரியாரிய கொள்கைக்கு முரணானது என்பதை இன்னும் கூறவில்லையா?

கடந்த வருடம் அண்ணாமலையை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்து சங்கி மோடியை நீங்கள் புகழ்ந்ததையும் நாங்கள் மறந்து விடுகிறோம்.

அதேபோல் கலைஞர் பற்றி நீங்கள் எழுதியதையும் எப்ப மறக்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துங்கள்.
ஆடுகள் எப்போதும் ஓநாயை நம்புகின்றன. அதுபோல் நாங்களும் எப்போதும் உங்களை நம்புகின்றோம்.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை