Loading Now
×

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற 26 ஆவது தமிழ்ச்சோலை முத்தமிழ் விழா!

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற 26 ஆவது தமிழ்ச்சோலை முத்தமிழ் விழா!

பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் முத்தமிழ் விழா கடந்த 04.01.2025 சனிக்கிழமை  சவினி லுத்தொம் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற இந் நிகழ்வில் இன்னியம் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

விருந்தினர்களாக சவுனி லு தொம் பகுதி மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களினால் மங்கள விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன.

10 வருடங்கள், 20 வருடங்கள், நிறைவுசெய்த ஆசிரியர்கள், வளர் தமிழ் 12 ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் மதிப்பளிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் அரங்கில் அமர்ந்து ஆர்வத்துடன் நிகழ்வுகளை கண்டுகளித்ததைக் காணமுடிந்தது.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை