Loading Now
×

மூத்த செய்தியாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் அக்கா காலமானார்…

மூத்த செய்தியாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் அக்கா காலமானார்…

மூத்த செய்தியாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் அக்கா காலமானார்…

(22.02.2025)

யாழ். குடாவின் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் வானொலியில், தயாரிப்பாளராக பணிபுரிந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில்
நடித்த அவர் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.

அதன்பின்னர் 1970களில் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த அவர் பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிரந்தர அறிவிப்பாளராக மூத்த தயாரிப்பாளராகவும் பணியாற்றி 2005இல் ஓய்வு பெற்றார்.

அதன்பின்னர் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்ட நிலையில் தனது மறைவுவரை அதன் தலைமை பொறுப்பில் இருந்தார்.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, BBC யின் சார்பில் நேர்காணல் செய்த மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் பின்னர் ஊடகம் ஒன்றிற்கு “பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி” என தெரிவித்திருந்தார்.

இவர் தயாரித்த பல ஒலிபரப்புத் தொடர்களும் முக்கிய பிரபலங்களுடனான செவ்விகளும் இவரை உலகப்பரப்பெங்கும் வாழ்ந்த தமிழ்மக்களிடையே பிரபலமாக்கியிருந்தன.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பி .பி .சி தமிழோசையில் பணி புரிந்து வந்த மூத்த செய்தியாளர் தயாரிப்பாளர்
ஆனந்தி சூர்யப்பிரகாசம் அக்கா அவர்கள் (BBC) தமிழோசை மூலமும் தமிழுக்கும் தமிழீழத் தேசத்திற்கும் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை