“மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்”- ஊடகச் சந்திப்பிற்கான அழைப்பு!
“மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” ஊடாக உங்களுடன் தொடர்புகொள்வதில் நிறைவடைகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க மரபுக்கு ஏற்ப, எமது உன்னதமான தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வினை மாபெரும் எழுச்சி நிகழ்வாக முன்னெடுக்க தயாராகி வருகின்றோம்.
எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ அரசினை நிர்வகித்து வந்த நாம், எமது கட்டமைப்புகள் சிதைக்கப்பட்ட பின்னர், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பதினாறு ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் தேசியத் தலைவருக்கான “வீரவணக்க” நிகழ்வினை முன்னெடுக்க தயாராகி வரும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஆரம்ப கலந்துரையாடல் ஒன்றினை உங்களுடன் மேற்கொள்வதற்கு விரும்புகின்றோம் .
சந்திப்புக்கான நாள் :- 05/03/2025 ( புதன் கிழமை)
சந்திப்புக்கான நேரம் :- மாலை 9 மணி (தாயகநேரம்)
இந்த இணையவழிச் சந்திப்பில் நீங்கள் உங்கள் ஊடகம் சார்ந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளை இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கும் நீங்கள், உங்கள் வரவினை உறுதிப்படுத்தும் வகையில், இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மின்னஞ்சல் [[email protected]] மற்றும் whatsapp +41779100778 தொலைபேசி இலக்கத்திற்கு தங்களின் ஊடகத்தின் பெயர், பங்கேற்பவர் பெயர், இணையவழியில் இணைந்து கொள்ள பயன்படுத்தும் பெயர், இணைபவரின் தொலைபேசி எண், வசிக்கும் நாடு போன்ற விபரங்களை பதிவு செய்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சமூக வாழ்வியல் தளத்தில் தொன்று தொட்டு ஊடகத்தின் பங்களிப்பு மிக மிக முக்கியமாக இருப்பதன் அடிப்படையில் இந்த வரலாற்று நிகழ்வில் ஊடகங்கள் மற்றும் ஊடக நண்பர்களின் பங்களிப்பும் அவசியமானது. எனவே தங்கள் வருகையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
குறிப்பு: சந்திப்பிற்கான இணைய முகவரி பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “
நன்றி
சி. அறிவுமணி
இணைப்பாளர்
ஊடகப்பிரிவு
மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்
Share this content:
Post Comment