Loading Now
×

வரலாற்றில் முதல் முற்றுகைத் தாக்குதல்…13.02.1985

வரலாற்றில் முதல் முற்றுகைத் தாக்குதல்…13.02.1985

தளபதிகள் , புலேந்தி அம்மான், அருணா வழி நடத்த வரலாற்றில் முதல் தடவை ஒரு படை முகாமை தமிழர் சேனை முற்றுகையிட்டுத் தாக்கியது.

13.02.1985

பதினாறு போராளிகள் வீரச்சாவடைந்தது என்பது  அப்போது எண்ணிப் பார்க்க முடியாத ஒரு  பேரிழப்பாகவே இருந்தது.

ஆனாலும், தாக்குதல் பெரு வெற்றி அளிக்காவிட்டாலும் பிந்திய அனைத்து போர் வெற்றிகளுக்குமான பயிற்சியாகவும், படிப்பினையாகவும், பட்டறிவாகவும் இத்தாக்குதல் அமைந்தது.

இதில் வீரச்சாவடைந்த ஒவ்வொரு மாவீரர்களினது கதையும் போராட்டம் குறித்த ஒவ்வொரு கதையைச் சொல்லும்.

இத் தாக்குதலில் வீரச் சாவடைந்த  சைமன் அவரது தந்தையைத் தேசத் துரோகம் காரணமாக கொழும்பில் வைத்து இயக்கம் சுட்ட போதும் கொள்கை மாறாது போராடி வீரச்சாவடைந்தார்.

இத் தாக்குதலில்தான் உடுகமகே கேமசிறீ ( லெப் பழசு) என்ற  முதலாவது சிங்கள மாவீரர் தமிழீழ விடுதலைக்காகத் தன்னுயிரை ஈர்ந்தார்.

தேசியத் தலைவர் தனது மகளுக்குத் துவாரகா எனும் பெயர் சூட்டக் காரணமாக இருந்த தலைவரின் மெய்ப்பாதுகாவலர் மயூரன் எனப்படும் துவாரகன் வீரச்சாவடைந்ததும் இந்தக் களத்தில்தான்.

இப்படி ஒவ்வொரு போராளிக்கும் ஒரு கதை இருக்கிறது.

நாம் எண்ணிப் பார்க்கவே முடியாத அர்ப்பணிப்பும், தியாகமும் நிறைந்தவை அவை.

குறிப்பாக புலிப் பண்பாடு முகிழ்ந்த வரலாறு இது.

இவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம். தொடர்ந்து போராட உறுதி எடுப்போம். 

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை