லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்று…
ஈழ மண்ணை இதயத்தில் தாங்கி விடுதலைக்காய் இன்னுயிர் ஈந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.

படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது.
எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் உட்பட 10 போராளிகளின் 38ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
Share this content:



Post Comment