இரண்டு மாவீரர்களின் தந்தையார் காலமானார்..
தருமபுரத்தின் மூத்த குடிமகனும் மாவீரர்களான அன்பன்,அன்பழகி ஆகியோரினை இந்த மண்ணுக்காக உவந்தளித்த அன்புத் தந்தையுமான கே.சிறீதரன் அவர்கள் காலமானார்..
ஐயாவுக்கு எமது புகழ் வணக்கம்..
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்…
தருமபுரத்தின் மூத்தகுடியாளன்
ஸ்ரீ அண்ணர் மறைந்தார்.
நெட்டுயர்ந்த உருவம் கொண்டு
நேர்த்தியான வர்த்தகனாய்.
நிமிந்த நடையழகை..
நினைத்துப் பார்க்கின்றோம் இன்று.
பேக்கரி ஸ்ரீ அண்ணன் என்றே
என் நினைவுக்கு முந்துகின்றார்.
அன்றைய ஆறடி அழகன்..
இன்று அமரரானார்.
தருமபுரத்தின் மூத்தோர்.
விழுதுகளை பரப்பி வாழ்ந்து
விடைபெறுகின்ற வரிசையில்
ஸ்ரீ அண்ணரும் சேர்ந்து கொண்டார்.
எல்லாம் முடிந்த பின்னர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு
தருமபுரம் வந்த போதும்..
தலையாட்டி சிரித்துப் போன.
மூத்த ஸ்ரீ அண்ணர்.
மூச்சிழந்து போனார்.
மாவீர மறவர்களை தந்த
மாண்புறு மன்னவனே
நேற்றுவரை எம்மோடு நின்ற
நெடிய உருவத்தோனே.
மலர்தூவி வணங்குகின்றோம்.
ஸ்ரீ அண்ணர் அமரரானார்.
செய்தி கேட்டு..
திகைக்கின்றோம் நாம்.
மாவீர திலகம் தந்தவரை
மலர்தூவி அனுப்புகின்றோம்.
என்றும் எங்கள் ஸ்ரீ அண்ணர்.
தரும்புரத்தோடுதானிருப்பார்.
சென்று வாருங்கள் ஸ்ரீ அண்ணா.
உங்கள் நினைவுகள் எங்களோடிருக்கும்.
மாணிக்கம்ஜெகன்
Share this content:



Post Comment