முன்னாள் Swiss TCC பொறுப்பாளரை துரத்தியடித்த இன்னாள் பொறுப்பாளர்.
2025 – சுவிஸ் தமிழ்க் கல்விச் சேவையின் முத்தமிழ் விழாவை குழப்ப முனைந்த முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு ரகுபதி அவர்களை துரத்தியடித்த கல்விச்சேவை இணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்புக் குளு பொறுப்பாளர்.

சுவிஸ் தமிழ்க் கல்விச் சேவையின் 30வது ஆண்டு நிறைவும்.
ஆண்டு 10 மற்றும் 12ம் ஆண்டுகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பும்இ ILC மொழி பண்பாட்டு நிறுவகத்தின் முதலாவது பட்டயமளிப்பு நிகழ்வும் 13.09.2025 சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் Burgdorf நகரில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முத்தமிழ் விழாவை குழப்ப முன்கூட்டியே ரகுபதி திட்டமிட்டிருந்ததை அறிந்திருந்த கல்விச்சேவை இணைப்பாளர் அவர்கள் காவல்துறையிடம் இரு வாரங்களிற்கு முன்னரே முறைப்பாடு செய்து வைத்திருந்தார்.

கல்வி சேவையின் இணைப்பாளர் அவர்களிடம் கல்வி சேவையின் இருப்பில் உள்ள பணத்தை கடனாக தருமாறு கேட்டபோது அதற்கு மறுப்பு தெரிவித்ததன் அடிப்படையிலேயே முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. ரகுபதிக்கும் கல்வி சேவையின் இணைப்பாளர் திரு.பார்த்திபன் அவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஆரம்பிக்கத் தொடங்கின, அதன் தொடர்ச்சியாக அவர் மீது அழுத்தங்களை பிரயோகித்து பணத்தை பெற்று விடலாம் என்ற நோக்கிலேயே முத்தமிழ் விழாவை நடத்துவதில் இடையூறுகளை ஏற்படுத்தி இருந்து, தற்போது நிகழ்வை குழப்பு நோக்குடன் வருகை தந்த திரு. ரகுபதி அவர்களை

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பெருந்திரளான மக்களின் எதிர்ப்புகளோடும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. ரகு அவர்களாலும் கல்விச் சேவை இணைப்பாளர் திரு. பார்த்திபன் அவர்களாலும் முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் வெளியேற்றப்பட்டார்.
Share this content:



Post Comment