Loading Now
×

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு. 02.08.2025

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு. 02.08.2025

தமிழீழ சுதந்திர விடுதலைப்போராட்டம் உலக வல்லாதிக்க அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், எந்த விதமான விட்டுக்கொடுப்புக்களுமின்றி வரித்துக்கொண்ட இலட்சியம் மாறாது, முள்ளிவாய்க்கால் முடிவிலும் நந்திக்கடலின் கரையோரமாகவும் எங்கள் தேசியத்தலைவர் தன்னை தமிழீழ மண்ணின் விடுதலைக்கு விதையாக்கி இற்றைக்கு பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே எமது விடுதலை இயக்கத்தின் மரபிற்கு அமைவாக 02.08.2025 சனிக்கிழமை அன்று ஐரோப்பிய நாடுகள் தழுவிய ஒன்றிணைந்த நிகழ்வாக சுவிற்சர்லாந்து நாட்டிலும் அதேவைளை அவுஸ்திரேலியா நாட்டிலும் மக்கள் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாகவும் பேரெழுச்சியுடனும் நடைபெற்றது.

தமிழீழ மண்ணையும் தேசியத்தலைவரையும் நேசித்த உலகப்பரப்பெங்கும் வாழும் தமிழ்மக்கள் எமது விடுதலைப்போராட்டத்தின் நீட்சியாக தமிழ்த்தேசிய எழுச்சியுடன் தேசிய செயற்பாட்டாளர்கள், தமிழ்தேசிய அமைப்புக்கள், தமிழீழ மண்ணையும் எம் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்த பொதுமக்கள், மற்றும் தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமையின் கீழ் போராடிய போராளிகள் என அனைவரும் ஒன்றுதிரண்டு தலைவருக்கான வரலாற்றுக் கடமையை உணர்வுபூர்வமாக நிறைவேற்றினர்

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை