Loading Now
×

தலைவரது எண்ணம் என்ன என்பதை இளையோர்கள் நினைவாக்கி உள்ளார்கள்.

தலைவரது எண்ணம் என்ன என்பதை இளையோர்கள் நினைவாக்கி உள்ளார்கள்.

02.08.2025 – அன்று சுவிஸ்நாட்டில் பாசல் நகரில் நடந்து முடிந்த எமது தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்விற்கு சென்றிருந்தேன். 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு ஈழத்தில் எப்படி ஒரு வீரவணக்க நிகழ்வு நிகழும், ஒரு மாவீரனை மக்கள், போராளிகள் எப்படி உயர் மதிப்பளிப்பார்களோ அப்படியொரு
காட்சியை என் கண் முன்னே நிறுத்தியது.
நிகழ்வுக்கு வந்த அனைவரும் அந்த நிகழ்வின் அரங்கை நோக்கியே அவர்கள் பார்வைகள் குவிந்து இருந்ததை நான் அவதானித்தேன். தலைவரது எண்ணம் என்ன என்பதை இளையோர்கள் நினைவாக்கி உள்ளார்கள் என்பதை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது .
மேதகுவின் இந்த நிகழ்வுக்கு அங்குள்ள அனைவரும் அந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டார்கள் .அந்த நிகழ்வு நடத்தியவர்களின் உறவினர்களோ அல்லது நிகழ்வை பொறுப்பெடுத்து நடத்தியவர்களோ அங்கு முன்னிலை படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
மேதகு நினைவேந்தல் அகவகக் குழுவினர்கள் அந்த நிகழ்வின் மேடையில் அவர்களை காணவில்லை. ஒரு சிறந்த திரைப்படத்தை எப்படி ஒரு இயக்குனர் இயக்குகின்றார்களோ அதைப்போன்று அவர்கள் பின்னணியிலிருந்து இயக்கியதை நாம் அவதானிக்க கூடியதாக இருந்தது. அவர்கள் மக்களையும் தங்கள் இனத்தையும் முன்னிலையில் செய்துள்ளார்கள் என்பது அங்கு தெளிவாகத் தெரிந்தது.மேதகுவின் நினைவேந்தல் நிகழ்வில் சுடரேற்றியவர்கள் அனேகமான பேர் மாவீரர்களின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நாள், 30 ஆண்டுகளைக் கடந்த சுவிசில்இப்படியொரு சிறப்பான நிகழ்வு இடம் பெறவில்லை என்று ஒரு வயதானவர் முணுமுணுத்தது என் காதில் விழுந்தது.

வீரவணக்க நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மேதகுவின் திருவுருவப்படம், சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட்டது.
சோழப் பேரரசின் முதலொளியே!
முப்படை கண்ட முதல் தமிழா!
இன்றும் கூட உரத்து சொல்கின்றேன்
பெருமிதம் தன்னை உடன் கொண்டு
கரிகாலன் என் அண்ணன் என்று
சிங்களத்தின் மத்திதனில்….
வல்லரசு கண்டு நடுங்கிய
எங்கள் தேசிய தலைவனை வணங்கி நிற்க்கின்றேன்.

நன்றி இணையம்…

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை